Hari's Corner

Humour, comics, tech, law, software, reviews, essays, articles and HOWTOs intermingled with random philosophy now and then

ஒரு வழக்கை நடத்துவதற்கு ஏன் வழக்கறிஞர் தேவை?

Filed under: Entries in Tamil by Hari
Posted on Tue, Jan 25, 2011 at 20:41 IST (last updated: Tue, Jan 25, 2011 @ 22:23 IST)

In this series < Previous Next >
சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது பொது அறிவு. இந்த நிலையில் ஒரு நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு ஏன் வழக்கறிஞர் தேவை? சிறிது அளவு சட்டம் தெரிந்தாலே போதுமே! நீதிபதியே ஒரு வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களை அறிந்து தீர்ப்பு கூற முடியாதா? ஏன் தேவையில்லாமல் பணத்தை செலவு செய்து வழக்கறிஞரை தேர்ந்தெடுத்து நம் சார்பில் நீதிமன்றத்தில் வாதாட வைக்கவேண்டும்?

சட்டம் இரண்டு வகையானது: செய்முறைச் சட்டம் ஒன்று. மற்றொன்று நடைமுறைச் சட்டம். ஒரு வழக்கை நடத்துவதற்கு இரண்டும் தேவைதான். நீதிமன்றங்களில் பல விதிகளும் நடைமுறைகளும் உள்ளன. பொது மக்களுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. வழக்கறிஞர்களே பல வருடங்கள் தொழிலில் பயிற்சி செய்த பிறகுதான் சட்டத்தின் விதிகளையும் நடைமுறைகளையும் நன்றாக அறிந்து ஓர் அளவுக்கு திறமையைப் பெருக்குகிறார்கள். நடைமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தால்தான் நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட முடியும், நீதியின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இதற்கு தேவைதான் சட்டத்தை மூன்று அல்லது ஐந்து வருடங்கள் படித்த பட்டதாரிகள்.

சட்டம் எல்லோருக்கும் சமம் - இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சட்டம் ஒரு கடல். அந்த கடலில் கப்பலை ஒழுங்காக கரைசேர்க்க வேண்டிய பொறுப்பை நாம் ஒரு திறமையுள்ள வழக்கறிஞரை நம்பி தான் ஒப்படைக்கமுடியும்.

In this series

2 comment(s)

  1. எல்லா துறைக்கும் அதற்கான நிபுணர்கள் , தேர்ந்தவர்கள், தேவை தான்.. அப்படி இல்லாமல் நாம் நாமே எல்லா வேலைகளையும் செய்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.

    Comment by logesh tamilselvan (visitor) on Tue, Jan 25, 2011 @ 21:08 IST #
  2. கருத்துக்களுக்கு நன்றி லோகேஷ். ஆமாம், நீ சொல்வது சரிதான். எல்லா துறையிலும் நிபுணர்கள் தேவை. நிபுணர்களால்தான் வாழ்கையே சுலபமாகி இருக்கிறது.

    Comment by Hari (blog owner) on Tue, Jan 25, 2011 @ 21:30 IST #

Comments closed

The blog owner has closed further commenting on this entry.