மழை காலம்
Filed under: Entries in Tamil by HariPosted at 21:59 IST (last updated: Wed, 29 Oct 2008 @ 21:23 IST)
நவராத்திரியை ஒட்டி சென்னையில் மழை காலம் ஆரம்பித்துள்ளது. வெப்பம் குறைந்துவிட்டதனால் எல்லோறுக்கும் மகிழ்ச்சியான காலம் இது. ஆனால் அதே நேரத்தில் இந்த காலத்தில்தான் கொசுத்தொல்லை அதிகமாகும், சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்படும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களும் ஊழலாகிவிடும்.
மாறும் வெப்பநிலையினாலும், கொசுக்களினாலும், குடிக்கும் தண்ணீரில் பரவும் கிருமிகளாலும் நம் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனக்கே இரண்டு மூன்று நாட்களாக தொண்டை சரியில்லை. பொதுவாக இந்த வானிலை மாற்றத்தின் முதல் கால கட்டத்தில்தான் இப்படியெல்லாம் நோய்கள் அதிகமாக பரவும். மேலும் மழை வந்தால் கவலை இல்லை.
No comments yet
Leave a comment »There are no comments for this article yet.