Hari's Corner

Humour, comics, tech, law, software, reviews, essays, articles and HOWTOs intermingled with random philosophy now and then

கலக்கப் போவது யாரு

Filed under: Entries in Tamil by Hari
Posted on Thu, Apr 12, 2007 at 16:06 IST (last updated: Wed, Oct 29, 2008 @ 21:34 IST)

விஜய் டீவியில் இப்பொழுது கலக்கப்போவது யாரு "பார்ட் 3" நடந்துகொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் வரும் மற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல் இது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எல்லோருக்கும் திரைப்பட நிகழ்ச்சிகளை சன் டீவியிலும், ராஜ் டிவியிலும், ஜயா டிவியிலும் பார்த்துப் பார்த்து சலித்துவிட்ட நிலையில் விஜய் டீவி செய்த இந்த நிகழ்ச்சியைய்ப் பாராட்டவேண்டியதுதான். ஆனால் இதில் பாருங்கள், ஏன் கிட்டத்தட்ட எல்லா பங்கேற்பாளர்களும் நம் "கேப்டனை" போல பேசியே வெற்றியடைகிறார்கள்? இதுவும் சில நாட்களில் நேயர்களுக்கு சலித்துவிடாதா?

நான் முதலில் இதை விரும்பிப்பார்த்தாலும், போகப்பொக பார்க்கவே தோணவில்லை. "மிமிக்கிரி" என்பது நல்ல நகைச்சுவையாக இருக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் அதில் வேறுபாடு இருக்க வேண்டும். அதில்தான் புதிய திறமையை வெளிப்படுத்த முடியும். விஜய்காந்த், ராஜினிகாந்த், சிவாஜி, கமல்ஹாஸன், நமது எம்.ஜி.ஆர், இவர்கள் போல பிரபல நடிகர்களை அச்சடிப்பது சுலபம். அதிக திறமையுள்ளவர்களால்தான் மற்ற நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நன்றாக அச்சடிக்க முடியும். எவ்வளவு நாட்களுக்குத்தான் செய்வதையே திருப்பித் திருப்பிச் செய்து நேயர்களை தொலைக்காட்சியின் முன் வைக்கமுடியும்?

மற்றபடி என்னால் இந்த நிகழ்ச்சியின் அமைப்பில் குறையொன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. வாழ்க விஜய் டீவி! :-P

5 comment(s)

  1. இதில் வேடிக்கையான விசயம் என்னனா..
    இந்த அருமையான நிகழ்ச்சியை சன் டி.வி அப்படியே மிமிக்ரி செய்கிறது...இது விஜய் டிவியின் வெற்றியெ..

    ஹரி உன் எழுத்து மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..

    Comment by Logesh TamilSelvan (visitor) on Thu, Apr 12, 2007 @ 22:26 IST #
  2. மிக்க நன்றி, லோகேஷ். ஆமாம், சன் டீவிக்கு "மெகா" சீரியல்களை விட்டால், சொந்தமாக ஒன்றுமே செய்யத் தெரியாது. :P

    Comment by hari (blog owner) on Thu, Apr 12, 2007 @ 22:43 IST #
  3. ஆமாம்! :D I have blogrolled you!

    Comment by Logesh TamilSelvan (visitor) on Sat, Apr 14, 2007 @ 12:46 IST #
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :) Logesh, enable anonymous comments on Loggy vazhi.Thanks for the link. I'll add your link now.

    Comment by hari (blog owner) on Sat, Apr 14, 2007 @ 17:39 IST #
  5. thanks for adding! i have enabled anonymous comments

    Comment by Logesh TamilSelvan (visitor) on Sun, Apr 15, 2007 @ 00:09 IST #

Comments closed

The blog owner has closed further commenting on this entry.