Hari's Corner

Humour, comics, tech, law, software, reviews, essays, articles and HOWTOs intermingled with random philosophy now and then

கனவுகள்

Filed under: Entries in Tamil by Hari
Posted on Thu, Aug 5, 2010 at 10:24 IST (last updated: Thu, Aug 5, 2010 @ 10:48 IST)

Dream-like பொதுவாக காலையில் விழிக்கும்முன் கனவுகள் தோன்றுவது பெரும்பாலான மனிதர்களுக்கு இயல்புதான். கனவின் நடுவில் உடனே விழித்தால் மட்டுமே ஞாபகத்தில் வைப்பது சுலபம் - இல்லையென்றால் மற்ற எண்ணங்களால் கலைந்துவிடும். என் கருத்து என்னவென்றால் கனவுகள் நம் உள்மனதில் அழ்ந்து பதிவான நினைவுகள், அனுபவங்கள், ஆசாபாசங்கள், இவையெல்லாம் எண்ணங்களாகக் குழம்பி உறக்கத்திலேயே வண்ணங்களாகவும் வடிவங்களாகவும் தோன்றுவதுதான். எனக்கு அதிகாலையில் தோன்றும் கனவுகள் மிகவும் வினோதமான வடிவங்களில் அமைகின்றன. காரணங்களை ஆராய எனக்கு சுவாரசியமில்லை. ஆனால் கனவுகளை ஆராய்ச்சி செய்யும் சிலர் இதற்காகவே நினைவுக் குறிப்பேடுகளைப் பராமரித்து வருகின்றனர். கனவுக் குறிப்பேடுகளை பராமரிப்பதால் தினம்தோரும் நாம் காணும் கனவுகளை ஞாபகத்தில் வைத்து வந்து, அதில் தோன்றும் குறிப்புகளை ஆராயலாம்.

ஆயிரத்தல் ஒருவருக்கு கனவுகளை முழு சுயநினைவோடு விருப்பம்போல திசைத்திருப்ப முடியும். இத்திறனை ஒரு சில நுணுக்கங்களை தினம் தூங்கும்முன் பயின்று வந்தால் எல்லோரும் அடையலாம். மனதின் முழு சக்திகளை நம் மனதைப் பயன்படுத்தியே நம்மால் உணர இயலவில்லை. அனால் விஞ்ஞானிகள் கனவுகள் மூலமாக மனதைச்சார்ந்த அந்தரங்கங்களை கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சிகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

2 comment(s)

  1. உங்கள் தமிழ் பனி தொடர வாழ்த்துக்கள்..

    Comment by Logesh (visitor) on Thu, Aug 5, 2010 @ 14:28 IST #
  2. நன்றி, லோகேஷ்!

    Comment by Hari (blog owner) on Thu, Aug 5, 2010 @ 18:28 IST #

Comments closed

The blog owner has closed further commenting on this entry.